உக்ரைன் தனது எல்லையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தொடர்பாக, ரஷ்யா மற்றும் முக்கிய ஐரோப்பிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களை சந்திக்க உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா, துருப்புக்களைக் கட்டியெழுப்புவதற்கான முறையான கோரிக்கைகளை ரஷ்யா புறக்கணித்துள்ளது எனக் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து அறிந்துக் கொள்வதற்கு அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு சந்திப்பைக் கோருவதாக அவர் மேலும் கூறினார்.
உக்ரைனின் எல்லையில் சுமார் 100,000 வீரர்கள் குவிக்கப்பட்ட போதிலும் உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என ரஷ்யா மறுத்துள்ளது.
ஆனால், சில மேற்கத்திய நாடுகள் ரஷ்யா இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக எச்சரித்துள்ளன.
மாஸ்கோ ‘எந்த நேரத்திலும்’ வான்வழி குண்டுவீச்சுகளுடன் தாக்குதல்களை தொடங்கலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட நாடுகள், உக்ரைனை விட்டு வெளியேறுமாறு தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளன. மேலும் சிலர் தலைநகரில் இருந்து தூதரக ஊழியர்களை வெளியேற்றியுள்ளனர்.
இதனிடையே, அடுத்த 48 மணி நேரத்திற்குள் கியேவில் இருந்து அனைத்து பணியாளர்களையும் திரும்பப் பெற அமெரிக்கா தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.