ஜமாத்-இ-இஸ்லாமி பாகிஸ்தான் முழுவதும் 100 போராட்டங்களை முன்னெடுக்கும் முகமாக போராட்டங்களை ஆரம்பித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 100 இடங்களில் கண்டன உள்ளிருப்புப் போராட்டத்தினை முன்னெடுக்கும் முகமாக முதலில் தெஹ்சில்கள், மாவட்டத் தலைமையகம், மாகாணம் மற்றும் தேசிய தொகுதிகளில் இருந்து ஆரம்பித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் தீர்க்கமான உள்ளிருப்புப் போராட்டம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளதாகவும் அது கானின் கட்சியை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் என்றும் பொதுச்செயலாளர் அமீர்-உல்-அசீம் கூறினார்.
முதலாளித்துவ அமைப்பின் கீழ், மக்களின் வாக்குகள் புதைக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அமீர்-உல்-அசீம், ஜே.ஐ.யின் போராட்டம் எந்தவொரு கட்சிக்கும் அல்லது அரசாங்கத்திற்கும் எதிரானது அல்ல, மாறாக உயரடுக்கு அரண்மனைகளைப் பாதுகாக்கும் மற்றும் ஏழைகளின் குடிசைகளை அழிக்கும் முதலாளித்துவ காலனித்துவ அமைப்புக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு ஒருதடவை மக்கள் ஆட்சியில் உள்ள பொம்மையிலிருந்து விடுபட போராடத் தொடங்குகிறார்கள், பின்னர் புதிய பொம்மையை மக்களிடத்தில் செலுத்துவதற்கான திரைமறைவுக்கையொன்று புதிய நம்பிக்கையைத் தருகின்றது’ என்றும் அவர் கூறினார்.
கொடுங்கோல் நிலப்பிரபுக்களும், ஊழல் முதலாளிகளும் புதிய அரசியல் கொடிகளை ஏந்திக் கொண்டிருக்கின்றார்கள் என்றும், நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கான ஒரே நம்பிக்கை ஜமாத்தே இஸ்லாமி மட்டுமே என்றும் அவர் கூறினார்.
ஜமாத்தே இஸ்லாமி பிரதிநிதிகள் வெறும் கவர்ச்சியான அறிக்கைகளை வழங்குவதற்குப் பதிலாக, கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் உண்மையில் தேசத்திற்கான சேவைகளை வழங்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்.