ஸ்ரீநகர் நாட்டிபோராவைச் சேர்ந்த சப்ரீனா யாசீன் என்ற பெண் தனது 10ஆவது வகுப்பில் ‘அச்சமற்ற மலர்’ என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள புத்தகம் இரண்டு பிரிவுகளாக உள்ளது. ஒரு பகுதி வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை விவரிக்கிறது, மற்ற பகுதி கவிதைகளைக் கொண்டுள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழா நட்டிபோராவில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
புத்தகம் எழுதியது பற்றி சப்ரீனா கூறுகையில், ‘எனது எழுத்தில், நான் பதின்மவயதினர் முகஙகொடுக்கும் சவால்கள் பற்றி அதிக கவனம் செலுத்தியுள்ளேன்.
மேலும் பதின்மவயதினர்கள் தங்கள் நேரத்தை குடும்பங்களுடன் செலவிடவும், கல்வித் தொழிலை உருவாக்குவதில் கவனம் செலுத்தவும் பரிந்துரைக்கிறேன்’ என்றார்.
‘நான் எதிர்கொண்ட சூழ்நிலைகளும் மற்ற இளைஞர்களின் அவதானிப்புகளையும் மையப்படுத்தியதால் எனக்கு கவிதைகளை எழுதத் தூண்டியது.
அதுவொரு நபராக இருந்தாலும் அல்லது எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அது என் இதயத்தைத் தொட்டது, என்னுள் எண்ணங்களைத் தூண்டியது. அந்த எண்ணங்களை எழுத்தில் வடிவமைக்க முயற்சித்தேன்,’ என்றும் அவர் கூறினார்.
‘பதின்மவயதினரின் கடினமான கட்டங்களைப் பற்றி நான் எழுதியுள்ளேன், அவற்றை சரியான முறையில் சமாளிப்பது எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.
நம் பெற்றோர் மற்றும் பெரியவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இருப்பது எவ்வளவு அவசியம் என்பதையும்’ கூறியுள்ளேன்’ என்றார்.
இதனை, ‘பெற்றோர்கள், பாதுகாவலர்கள், பெரியவர்கள் மற்றும் உடன்பிறந்தவர்கள் தங்கள் குழந்தைகளையும் இளைஞர்களையும் புரிந்து கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் மேலும் கூறினார்.
‘எனது பெற்றோரும் எனது ஆசிரியர்களும் எப்போதும் எனக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவினால் தான் எனது படிப்பையும், எழுத்தையும் சமநிலைப்படுத்துவதற்கு முடிகிறது’ என்றார்.