ஜனநாயக சமூகத்தை உறுதிப்படுத்த ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜனநாயக சமூகத்தை உறுதி செய்வதில் ஊடகவியலாளர்கள் அடிப்படைப் பங்காற்றுவதாக தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விமர்சனக் குரல்களை மௌனமாக்குவதானது, பொது விவாதம், சுதந்திரம் மற்றும் அனைவரின் மனித உரிமைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்