இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் குறித்த அறிக்கை மீது விவாதம் நடத்த வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
மிச்சேல் பச்லெட்டின் அறிக்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளமையை சுட்டிக்காட்டிய அவர், அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்ள் விவாதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்டதற்கும், சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது செய்யபட்டமைக்கும் அரசாங்கமே பொறுப்பு என்றும் யந்த திஸாநாயக்க தெரிவித்தார்.