தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளன. இந்த தளர்வுகள் மார்ச் மாதம் 2 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தளர்வுகளின் படி சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 200 பேர் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் நர்சரி பாடசாலைகள், மழலையர் விளையாட்டு பாடசாலைகள் இன்று முதல் திறக்கப்படவுள்ளன. உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஆகியவை முழுமையாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.