‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையை உண்மையாக ஏற்றுக்கொண்டால், நாட்டை இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் கைழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கையொப்பம் இட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தின் கீழ் நாட்டைக் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தின் கீழ் இந்த நாட்டை அரசாங்கம் கொண்டு வர முடிந்தால், அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் ஆனால் தற்போது சிங்கள சமூகத்திற்கென தனிச் சட்டம், தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கென தனிச் சட்டம் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, இனம், மதம் மற்றும் மாகாண அடிப்படையில் மக்களை நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டாம் என அவர் இதன்போது அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.