இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 615 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 இலட்சத்து 72 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இவர்களில் 4 கோடியே 18 இலட்சத்து 43 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். அதேநேரம் 3 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று ஒரேநாளில் 515 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.