இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலம் அடிப்படை உரிமைகளை மீறுவதாக தெரிவித்தே உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலம் இலங்கையின் அரசியலமைப்பின் 3, 4, 11, 12(1), 13(1), 13(3), 13(4), 13(5), 138 அல்லது 141 ஆகிய சட்டங்களுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படை உரிமைகளுக்கு முரணாக சட்டம் கொண்டுவருவதென்றால் அது நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடனும், சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தான் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில், சட்டத்தை அடிப்படை உரிமைகளை மீறாத வழியில் இயற்ற வேண்டும் என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பாக்கியசோதி சரவணமுத்துவும் மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.