விமான எரிபொருள் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், விமான கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக நான்கு முறை விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ லிட்டருக்கு, ஏறக்குறைய 5.2 சதவீதம், அதாவது 4 ஆயிரத்து 482 ரூபாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சராசரி விலையின் அடிப்படையில் விமான எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16 ஆம் திகதிளில் மாற்றியமைக்கப்படுகின்றது. இந்த விலை உயர்வு விமான சேவை நிறுவனங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் எனக் கருதப்படுகிறது.