பிரேஸிலிய நகரமான பெட்ரோபோலிஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 117பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.
மீண்டும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால், மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மேலும் அழிவு ஏற்படும் என்ற அச்சத்தில் சிலர் நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.
700க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளூர் பாடசாலைகள் மற்றும் பிற தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
இடிபாடுகளுக்கு அடியில் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பது இப்போது நடைமுறையில் சாத்தியமற்றது என மீட்பு பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோபோலிஸில் இந்த வாரம் பெய்த மழை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிலேயே மிக மோசமான மழையாக பதிவாகியுள்ளது.
செவ்வாய்கிழமை மட்டும் பெய்த மழை பெப்ரவரி முழுவதிலும் சராசரியை விட அதிகமாக பெய்த மழையாக பதிவானது. இது ரியோவின் வடக்கே நகரத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தைத் தூண்டியது மற்றும் வீதிகளை சேறு ஆறுகளாக மாற்றியது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தன மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பெய்த மழை, நகரத்தில் சுமார் 6 செமீ (2.36 அங்குலம்) மழை பதிவானது. இப்பகுதியில் ஒரே இரவில் 4 செ.மீ மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.