ஹொங் கொங்கில் புதிதாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள், மூன்று வருட தகுதிகாண் காலத்தை முடிக்க தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழாக பயிற்சி பெற வேண்டும் என அரச சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
தேசத்தின் வளர்ச்சி மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கு பற்றி அரசு ஊழியர்களின் புரிதலை மேம்படுத்துவதையே இப்பயிற்சி நோக்கமாகக் கொண்டது என அரச சேவைகள் பணியகத்திற்கான செயலாளர் பட்ரிக் நிப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுச் சேவை குழுவின் கொள்கை விளக்கக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ‘ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்’, ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு சட்டம், அடிப்படைய விடயங்கள் உள்ளிட்டவை ‘மிக முக்கியமானவை’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர் ஆட்சேர்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியான அடிப்படை சட்டத்தேர்வில் தேசிய பாதுகாப்புச் சட்டமும் இணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் பதவியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சின் அலுவலகத்துடன் இணைந்து ‘சர்வதேச நிலைமை மற்றும் அரசின் நிலைப்பாடு குறித்த அரசு ஊழியர்களின் அறிவை ஆழப்படுத்துவதற்காக’ மாதாந்த பேச்சுக்களை ஏற்பாடு செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் செயற்பாட்டின் முதல் விரிவுரை கடந்த 27ஆம் திகதி ஹொங்கொங்கின் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஷி ஜின்பிங்கின் இராஜதந்திர சிந்தனைகள் எனும் தலைப்பில் நடைபெற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய தசாப்தத்தில், ஹொங்கொங்கை நேசிக்கும் மற்றும் ஹொங்கொங்கிற்கு விசுவாசமான, தொழில்முறைகள் அறிந்த, திறமையான, பொறுப்பான மற்றும் கடின உழைப்பு கொண்ட குழுவினர் தேவையாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொலைநோக்கு மற்றும் நல்லொழுக்கம் மற்றும் திறன் இரண்டையும் காட்டும் அதிகாரிகளை சிறந்த பதவிகளில் அமர்த்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.