புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தரும் பயங்கரவாதத்தை கண்டித்தும் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள லோலாப் பள்ளத்தாக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கருசன் மற்றும் தெரியன் பகுதிகளிலேயே இவ்வாறு பேரணி நடத்தியுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்திருந்தனர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உயிரிழந்த 40 வீரர்களின் உயர்ந்த தியாகத்தை நினைவு கூர அனைத்து இந்தியர்களும் தலைப்பட்டுள்ளனர் என போராட்டக்காரர்கள் கூறினார்கள்.
அத்துடன், தேசத்துக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் தீபம் ஏற்றி, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதோடு, பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக பேரணியும் நடத்தப்பட்டது. இறுதியாக தேசிய கீதத்துடன் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.