பாகிஸ்தானிலுள்ள நூற்றுக்கணக்கான பீஹாரிகள் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு கணினி மயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படாததால் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
பிஹாரி சமூகத்தின் நீண்டகால பிரச்சினையை முன்னிலைப்படுத்தி முஹிப்பன்-இ-பாகிஸ்தான் அறக்கட்டளையானது கராச்சி ஊடக நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
முஹிப்பன்-இ-பாகிஸ்தானின் தலைவர் மும்தாஜ் அன்சாரி கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் பீஹாரிகள் சமூகத்தினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
அவர்கள் பீஹாரிகள் ஸ்ரீமீதான சுரண்டலை அரசாங்கம் தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்கவும், நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், கல்வி, சுகாதாரம் மற்றும் பிற அடிப்படை வசதிகளைப் பெற வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் மாவட்ட மலிர் தலைவர் பெரோஸ் கான் கருத்து வெளியிடும் போது, “பீஹாரி சமூகம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது, அதில் மிகவும் வெளிப்படையானது.
உதாரணமாக, அவர்களால் வங்கிக் கணக்குகளைத் திறக்கவோ, கார்களை வாங்கவோ, அவற்றைப் பதிவு செய்யவோ அல்லது எந்தச் சொத்தையும் வாங்கவோ முடியாது’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், இன்சார் மற்றும் இம்ரான் பிஹாரி உள்ளிட்ட பிற அரசியல் தலைவர்கள், ‘பீஹாரி சமூகம் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளன’ என்று கூறியுள்ளார்.
கராச்சியில் அதிகளவான பீஹாரிகள் வசித்து வருவதாகவும் ஆனால் அடையாள அட்டைகள் இல்லாததால் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கணக்கிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.