புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
அதன்படி, இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் விண்ணப்ப காலம் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினால் ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தகுதியான அரசியல் கட்சிகளை சிறப்பு நேர்காணலுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜனவரி 24ஆம் திகதி முதல் தொடங்கியது.
தற்போது, நாட்டில் 79 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் சட்ட சிக்கல்கள் உள்ள பதிவு செய்யப்பட்ட 6 அரசியல் கட்சிகள் செயலற்ற அரசியல் கட்சிகளாக கருதப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.