நேட்டோ உறுப்பு நாடுகள் இராணுவக் கூட்டணியின் கிழக்குப் பகுதியில் நிலம், கடல் மற்றும் விமானப் படைகளை வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.
‘கூட்டணியின் கிழக்குப் பகுதிக்கு கூடுதல் தற்காப்பு நிலம் மற்றும் விமானப் படைகளையும், கூடுதல் கடல்சார் சொத்துக்களையும் நாங்கள் நிலைநிறுத்துகிறோம்’ என்று நேட்டோ தூதர்கள் அவசர பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
‘அனைத்து தற்செயல்களுக்கும் பதிலளிக்க எங்கள் படைகளின் தயார்நிலையை நாங்கள் அதிகரித்துள்ளோம்’ என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் இராணுவ உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் இன்று (வியாழக்கிழமை) ரஷ்யப் படைகள் உக்ரேனிய நகரங்களை உலுக்கிய பின்னர், போலந்து அரசாங்கம் நேட்டோவை கிழக்கில் தனது படைகளை வலுப்படுத்துமாறு வலியுறுத்தியது.
‘நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்துவதற்கான நேரம் இது. அத்தகைய முடிவுகள் எடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,’ என அரசாங்க செய்தித் தொடர்பாளர் பியோட்டர் முல்லர் கூறினார்.
அத்துடன், உக்ரைனில் போலந்து இராஜதந்திர பணிகள் முடிந்தவரை திறந்திருக்கும் என்று முல்லர் கூறினார்.
இந்தநிலையில், நிலம், கடல் மற்றும் விமானப் படைகளை வலுப்படுத்த நேட்டோ உறுப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.
2014ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் முந்தைய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, கிரிமியா பகுதியைக் கைப்பற்றியபோது, நேட்டோ அதன் கிழக்குப் பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்பத் தொடங்கியது.
கடந்த 11ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நேட்டோ நட்பு நாடான போலந்திற்கு கூடுதலாக 3,000 அமெரிக்க வீரர்களை அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த மாத தொடக்கத்தில் போலந்துக்கு வந்த சுமார் 1,700 வீரர்களுடன் துருப்புக்கள் சேரும் என்று பென்டகன் அறிக்கை கூறியது.
கடைசி ஒரு மணி நேரத்தில் நேட்டோ, உக்ரைன் மீதான ரஷ்யாவின் பயங்கரமான தாக்குதலை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, இது முற்றிலும் நியாயமற்ற தாக்குதல் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ‘இந்த புதுப்பிக்கப்பட்ட தாக்குதல், ஐ.நா சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறுவதாகும்’ என்றும் ‘இது ஒரு சுதந்திரமான அமைதியான நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்புச் செயலாகும்.’ என்றும் கூறியது.
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாகக் கருதும் பாதுகாப்புக் கூட்டணி, இந்த தாக்குதலை செயற்படுத்தியதற்காக பெலாரஸைக் கண்டித்துள்ளது.