உக்ரைனில் நிகழ்த்தப்படும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புடினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைப்பேசி மூலம் பேசிய அவர், இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ”உக்ரைன் தொடர்பான அண்மைக்கால நிகழ்வுகள் குறித்து புடின் பிரதமர் மோடியிடம் எடுத்து கூறியுள்ளார்.
நேட்டோ-ரஷ்யா இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு நேர்மையான அக்கறையான பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகான முடியும் என மோடி தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்சினைக்கு தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை தீர்வுக்கான வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியாவின் கவலையை வெளிப்படுத்திய மோடி இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதற்கு இந்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளதையும் எடுத்துரைத்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.