ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகின்ற நிலையில், இரு நாடுகளுக்கான வர்த்தகத்திலும், நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது.
இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் இரு நாட்டு வர்த்தகர்களுக்காக உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்வதில் அவசரம் காட்டக்கூடாது என இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய ஏற்றுமதியாளர்கள், இரு நாட்டு வர்த்தகர்களுக்காக உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்வதில் அவசரம் காட்டக்கூடாது.நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து அதற்கேற்ப செயல்படவேண்டும்.
ஏற்றுமதி வர்த்தக பொருட்கள் நிலவரம் குறித்த விவரங்களை வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு மையம் (ஓ.எப்.ஏ.சி.இ) வெளியிடவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.