நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை சந்திப்பதற்காக அமைச்சர் இன்று புதுடில்லிக்கு செல்லவிருந்தார்.
அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளின் விநியோகத்திற்கான நிதி ஒத்துழைப்பை இறுதி செய்ய அவரது விஜயம் அமையவிருந்தது.
இந்நிலையில் குறித்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மாற்று திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா ஏற்கனவே எரிபொருளுக்காக 500 மில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ள நிலையில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ய 1 பில்லியன் டொலர் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.