• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் – ஜனாதிபதி!

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் – ஜனாதிபதி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/26
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உலகளாவிய தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்துவதற்கான உயர்மட்ட விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் (Abdulla Shahid) அப்துல்லா ஷாஹிட் தலைமையில் இந்த விவாதத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளமைக்கு, இலங்கை சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கொரோனா தொற்றுப் பரவலானது, அனைத்து நாடுகளுக்கும் பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சமத்துவமின்மையானது, ஆபத்துமிக்க புதிய திரிபுகள் ஏற்படுவதற்குள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

கடந்தாண்டு பொதுச் சபைக் கூட்டத்தின் போது நான் உரையாற்றியவாறு, அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும்.

இலங்கையில் 2021 ஜனவரி மாதத்திலேயே தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது, முதன்முறையாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்த உடனேயே இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அது, கொரோனா தொற்றால் ஏற்படக்கூடிய மரணங்களைத் தடுத்தல், நோய் நிலைமையைக் குறைத்தல் மற்றும் தொற்றுப் பரவலைக் குறைத்தல் போன்று பொதுப் பாதுகாப்பு இலக்குகளைப் பாதுகாத்துக்கொண்டு, சமூக மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளைப் பராமரிப்பதற்கான கொள்கைகளின் மீது எடுக்கப்பட்ட ஒரு படிமுறையாக விளங்கியது.

சுகாதார ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பெரியவர்கள் என்ற முன்னுரிமை அடிப்படையிலேயே நாம் எமது தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம். இது, ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையின் கீழ் பின்பற்றப்பட்டது.

2022 ஜனவரி மாதத்துக்குள், 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

இதனால், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு இருந்த ஆர்வத்தை, நாடு முழுவதிலும் காணக்கிடைத்தது.

இவ்வாண்டு பெப்ரவரி 15ஆம் திகதி வரையில், தடுப்பூசி பெற்றுக்கொள்ளக்கூடிய மொத்தச் சனத்தொகையில் 95 சதவீதமானோர் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், 80 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசி ஏற்றலுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த முழுமையான தடுப்பூசி ஏற்றலுக்கு உள்வாங்கப்பட்டவர்களில் 44 சதவீதமானோர், பூஸ்டர் தடுப்பூசியையும் (மூன்றாவது டோஸ்) பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றியதால், தொற்றுப் பரவல் காரணமாக நாட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய அழிவு நிலைமையைக் கட்டுப்படுத்த முடிந்தது.

நேரடியாகவோ அல்லது COVAX திட்டத்தின் ஊடாகவோ தடுப்பூசிகளை வழங்கிய நாடுகளின் பெருந்தன்மைக்கு இலங்கை தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

இதனூடாக, தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகளவில் தடுப்பூசிகளைப் பெற்று, நாட்டுக்குத் தேவையான முழுமையான தடுப்பூசி ஏற்றலை முன்னெடுக்க வாய்ப்பு கிடைத்தது.

மனித குலத்தின் நன்மைக்காக, ஒட்டுமொத்த தடுப்பூசி ஏற்றலைத் துரிதப்படுத்த, அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டுமென, அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொள்கிறேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: COVAXகோட்டாபய ராஜபக்ஷதடுப்பூசிஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கட்சியினர், விவசாயிகளை வீதிக்கு இறக்கினர் – மஹிந்த!

Next Post

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

Related Posts

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!
இலங்கை

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-19
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!
இலங்கை

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

2026-03-19
சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!
இலங்கை

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

2026-03-19
கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
BREAKING

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-19
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!
இங்கிலாந்து

வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

2026-03-19
விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!
இங்கிலாந்து

விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

2026-03-19
Next Post
நாய் இறந்த சோகத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – யாழில் சம்பவம்!

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

செல்சியின் உரிமையாளர், உக்ரையின் படையெடுப்பு குறித்து தெளிவு படுத்த வேண்டும் அல்லது தடைய எதிர்கொள்ள வேண்டும்!

செல்சியின் உரிமையாளர், உக்ரையின் படையெடுப்பு குறித்து தெளிவு படுத்த வேண்டும் அல்லது தடைய எதிர்கொள்ள வேண்டும்!

திருத்தந்தையினை சந்தித்து பேசுகின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

திருத்தந்தையினை சந்தித்து பேசுகின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

0
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

0
சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

0
கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

0
இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-19
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

2026-03-19
சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

2026-03-19
கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-19
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

2026-03-19

Recent News

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-19
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

2026-03-19
சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

2026-03-19
கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.