• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மேற்கின் ஆயுதக் குவிப்பு – ‘SWIFT’தடைக்கு  பதிலளித்தது ரஷ்யா!

மேற்கின் ஆயுதக் குவிப்பு – ‘SWIFT’தடைக்கு பதிலளித்தது ரஷ்யா!

அணுவாயுதங்களை பெலாரஸுக்கு நகர்த்துகிறது ரஸ்யா - பேச்சுக்கு உக்ரைன் இணக்கம்!

KP by KP
2022/02/27
in உலகம், ஐரோப்பா, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
100 1
A A
0
44
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டின் அணுவாயுத தடுப்புப் படைப்பிரிவை உஷார் நிலையில் வைத்திருக்குமாறு தளபதிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். தேவையற்ற அணுவாயுதப் பதற்றத்தை அவர் உருவாக்குகிறார் என்று அமெரிக் கா கண்டித்திருக்கிறது.

புடின் இன்று ஞாயிற்றுக்கிழமை அரச தொலைக்காட்சியில் பேசுகையில் ரஷ்யாவின் அணுஆயுதத் தடுப்பை இயக்கும் படைகளை (forces operating Russia’s nuclear deterrent) முழு உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.அவரது இந்த அறிவிப்பு உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

போரில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் நிலை தோன்றினால் அதிலிருந்து ரஷ்யாவைப் பாதுகாப்பதற்கே இந்த உஷார் உத்தரவு என்று ரஷ்யத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைனில் நேட்டோ படைகள் தங்கள்போராயுதங்களைத் தொடர்ந்து குவித்து வருவதற்கும் ரஷ்யாவை சர்வதேச “ஸ்விஃப்ட்” வங்கி வலையமைப்பில் இருந்து ஒதுக்க மேற்கு நாடுகள் எடுத்துள்ள முடிவுக்கும் எதிர்வினையாற்றும் நோக்குடனேயே புடின் இந்த உத்தரவை விடுத்துள்ளார் என நம்பப்படுகிறது.

புடினின் அறிவிப்பு வெறுமனே ஓர் அரசியல் உத்தியே அன்றி அதில் அச்சப்பட எதுவும் கிடையாது என்றும், இல்லை, அவர் தனது மனநிலையை இழந்துவருகிறார் என்பதன் அறிகுறிஇது என்பதால் உலகத்தின் பாதுகாப்பு ஒரு புதிய வழமைக்குள்(new normal forour safety) வந்துள்ளது என்றும் வெவ் வேறு விதமான அவதானிப்புகளை போரியல் வல்லுநர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளி நாடாகிய பெலாரஸில் ரஷ்யா தனது அணு ஆயுதங்களை நிறுத்துவதற்கான அங்கீகாரத்தை அங்கு இன்று நடைபெறுகின்ற ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் எதிர்பார்த்தது போல 72 மணி நேரப் படை நடவடிக்கைகளில் ரஷ்யாவால் உக்ரைனை நிலைகுலையச் செய்ய முடியாமற் போயிருப்பதால் அது தனது தாக்குதல் உத்திகளை மாற்றிவிசாலப்படுத்தியுள்ளது. உக்ரைனின்இரண்டாவது பெரிய ஹார்கீவ் நகரத்தினுள் ரஷ்யப் படைகள் நுழைந்துள்ளன என்று கூறப்படுகிறது. நகரம் யாருடையகட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் தகவல் எதுவும் இதுவரைவெளி வரவில்லை.

இதற்கிடையில், இரு தரப்புகளும் திங்கட்கிழமை உக்ரைன் – பெலாரஸ் எல்லைபகுதியில் சந்தித்துப் பேசுவதற்கு இணங்கி உள்ளன. பேச்சுக்களுக்குத் தயார் ஆனால் பெலாரஸ் நாட்டில் வந்து பேசநாங்கள் தயாரில்லை என்று ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் நிராகரித்திருந்தது அதனையடுத்தே இரு நாட்டு எல்லையோரம், ரஷ்யப் படைகளது கட்டுப்பாட்டில்இருக்கின்ற செர்னோபில் பகுதியில் சந்திப்பை நடத்த ஏற்பாடாகிவருகிறது.

          -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                    27-02-2022

Related

Tags: அணு ஆயுதம்உக்ரைன்யுத்தம்ரஸ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனாவிடமிருந்து விலகிவரும் இலங்கை இந்தியாவை நெருங்குகிறது!

Next Post

ரஷ்ய வங்கிகள், உலக நிதித் தொடர்புகளை இழந்து திவாலாகுமா?

Related Posts

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்
இலங்கை

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

2026-01-30
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு
உலகம்

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

2026-01-30
சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
இலங்கை

சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை

2026-01-30
5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!
இலங்கை

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில்!

2026-01-30
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்எச்சரிக்கை!
இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்எச்சரிக்கை!

2026-01-30
இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!
இலங்கை

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

2026-01-30
Next Post
ரஷ்ய வங்கிகள், உலக நிதித் தொடர்புகளை இழந்து திவாலாகுமா?

ரஷ்ய வங்கிகள், உலக நிதித் தொடர்புகளை இழந்து திவாலாகுமா?

இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!

249 இந்தியர்களுடன் மற்றுமோர் விமானம் இந்தியா வந்தது!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை – இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல்!

ஐ.நா கூட்டத்தொடரின் 49ஆவது அமர்வு இன்று ஆரம்பம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

0
பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

0
அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

0
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.