டீசல் இல்லையேல் இன்று(வியாழக்கிழமை) அல்லது நாளை 90 வீதமான பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அங்ஞன பிரியஞ்சித் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போதுவரை எரிபொருள் முறையாக கிடைக்காதமையினால் 70 வீதமான தனியார் பேருந்துகள் போக்குவரத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பேருந்துகளுக்கு எரிபொருள் முறையாக கிடைக்காத பட்சத்தில் 90 வீதமான பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தங்களுக்குத் தேவையான டீசலை பெற்றுக்கொள்வதற்காக பேருந்து சாரதிகள் பல மணிநேரம் வரிசையிலும் தூக்கமில்லாதும் காத்திருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பேருந்துகள் ஓடுவதற்கான டீசலையாவது பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இல்லையேல், அதிகமான பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.