அமைச்சர் சிபி ரத்னாயக்க பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் அவர் இன்று(வெள்ளிக்கிழமை) இறுதி முடிவை எடுப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தனக்கு வேலைசெய்யக்கூடிய அமைச்சு பதவி கிடைக்கும் என அமைச்சர் சிபி ரத்னாயக்க நம்பியதாக கூறப்படுகின்றது.
எனினும், அது இடம்பெறாத நிலையிலேயே பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில், தனக்கு எதிரானவர் எனக் கருதப்படும் எஸ்.பிக்கு முக்கிய அமைச்சு பதவி வழங்கப்பட்டமையும், அவரின் அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.