உக்ரைனில் இருந்து மாணவர்கள் உள்ளடங்களாக 16 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சுமி எல்லைப் பகுதியில் 700 மாணவர்கள் காத்திருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்கள் தன்னிச்சையாக வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீட்பு நடவடிக்கை எடுக்கும் வரை அங்கேயே காத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக 4 பேருந்துகள் பொல்டவா விரைந்துள்ளதாகவும், விரைவில் அங்கு சிக்கியிருப்பவர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.