உக்ரைன் மீதான போரை நிறைவுக்கு கொண்டுவர இந்தியா, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய துணைப் பிரதமர் டொமினிக் ராப், ரஷ்யாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள இரு நாடுகளும், உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினரான சீனாவும் உறுப்பினரான இந்தியாவும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளும் ரஷ்யாவுக்கு அழுத்தம் தர வேண்டும் என டொமினிக் ராப் வலியுறுத்தியுள்ளார்.