இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை சேர்ந்த உமா என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், வரும் மே மாதம் இந்த திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து டி.இமான் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டி.இமான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது விவாகரத்து குறித்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.