எதிர்கால இலங்கையை கட்டியெழுப்புவதற்கான உகந்த செயற்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஊழல், மோசடி மற்றும் இலஞ்சம் நிறைந்த தற்கால அரசாங்கத்திற்கு இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாதென்பது நிதர்சனமான உண்மை என்றும் அவர் கூறினார்.
கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மிகப் பெரிய தியாகங்களை அரசியல்வாதிகளே செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சாதாரண மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் டொலர் வைப்புகள் இந்நாட்டில் இருக்கிறது என்றும் அதை உடனடியாக வெற்றி கொள்ள வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்நாட்டு மக்களை ஏமாற்றுவதோடு தமது இயலாமை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் வெளிக்காட்டுவதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.