விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இந்த தருணத்தில் எதிர்க்கட்சியில் தனிக் குழுவாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு விமர்சனங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, மூன்று உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசை விமர்சிக்க வேண்டும் என கூறினார்.
மேலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்றும் தேர்தல் ஒன்று வந்தால் மக்களே இவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம் விவசாயிகளின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் நளின் பண்டார கூறினார்.
பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயிகளே என்பதை அரசாங்கம் அறியாதமையின் விளைவையே நாடு தற்போது அனுபவித்து வருவதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டார்.