நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் கட்சிக்குள் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறாமை, நிதி நிலைவரம் பற்றி தெளிவுப்படுத்தாமை உட்பட மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தே குறித்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுந்தரப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.
இந்தநிலையிலேயே பிரதான எதிரணி இப்படியொரு வியூகத்தை கையாள எதிர்ப்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.