நாட்டில் அடுத்தடுத்து பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) மாலை நடைபெறவுள்ளது.
தொடர் விலையேற்றத்துக்கு மக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
எனவே, இவ்விவகாரம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி முக்கிய சில முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.