மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை தற்காலிகமாக தடை செய்யுமாறு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியத்திற்கு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
மணல் அகழ்வினால் பாரிய சுற்றாடல் பாதிப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும், மணல் அகழ்வினால் அம்பலாந்தோட்டை வலேவத்தை கிராமமே முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மணல் அகழ்வினால் விவசாயம் செய்யக்கூடிய வயல் நிலங்களும் தென்னை போன்ற பொருளாதார ரீதியில் பயிரிடப்பட்ட நிலங்களும் அழிந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.
எனவே, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிறப்புக் குழுவொன்றை நியமித்து, விரிவான விசாரணை நடத்தி அறிக்கையைப் பெற்று, அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதுவரை மணல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.