ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்வது 47 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ‘சிப்ரி’ நிறுவனம் உலக நாடுகளின் ஆயுதக் கொள்முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், கடந்த 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில் இந்தியாவின் இராணுவ தளவாடங்கள் இறக்குமதி 21 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ரஷ்ய ஆயுத இறக்குமதி 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில் 69 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.