2 பில்லியன் டொலர் இந்திய கடன் வசதி இன்று (புதன்கிழமை) இறுதியாக என தான் நம்புவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இதற்காகவே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை புதுதில்லியில் சந்தித்தார் என கூறினார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய நிதி இதன்போது கோரப்படவுள்ளது.
கப்பல்கள் நாட்டிற்கு வந்ததன் பின்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் வழங்கப்படும் எனவும் பின்னர் தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்தார்.
எரிபொருள் இல்லை என எதிர்க்கட்சியினர் எழுப்பும் தேவையற்ற பிரசாரம் காரணமாக மக்கள் எரிபொருளை சேகரிக்கத் தொடங்குகிறார்கள் என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.