ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக 4ஆம் கட்டத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ரஷ்யாவின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ரஷ்யாவிலிருந்து எஃகுப் பொருள்களை இறக்குமதி செய்வதும், ரஷ்யாவுக்கு சொகுசுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதும் தடைசெய்யப்படவுள்ளது.
அதிக செல்வாக்கு கொண்ட மேலும் கூடுதலான ரஷ்யத் தொழிலதிபர்களின் சொத்துகளும் முடக்கப்படவுள்ளன.
பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகள் தங்கள் சொந்தப் பொருளியல்கள்மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மதிப்பிட ஐரோப்பிய ஒன்றிய நிதியமைச்சர்கள் பிரசல்ஸில் கூடியுள்ளனர்.