இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்று உறுதியான மேலும் 301 பேர் இன்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 57 ஆயிரத்து 435ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 16 ஆயிரத்து 579 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.