எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 260 ரூபாயினாலும் 01 கிலோகிராம் பால் மா பொதியின் விலை 550 முதல் 600 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி 01 கிலோகிராம் பால் மா பொதியின் புதிய விலை சுமார் 1845 ரூபாயாக இருக்கலாம் என்றும் 400 கிராம் பக்கெட்டின் விலை 800 ரூபாயாக இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதிகரிப்பு குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பால் மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் இரண்டு நாட்களில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.