மேரியோபோல் நகரில் உள்ள படைகள் சரணடைய ரஷ்யா விதித்த காலக்கெடுவை உக்ரைன் நிராகரித்துள்ளது.
மாஸ்கோ உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணி முதல் மாலை 4 மணிக்குள் மேரியோபோல் நகரில் உள்ள படைகள் சரணடைய ரஷ்யா காலக்கெடு விதித்தது.
உக்ரைனிய அதிகாரிகள் ஆயுதங்களைக் கீழே போட ஒப்புக்கொண்டால், மனிதாபிமான வெளியேற்ற பாதைகள் திறக்கப்படும் என்று ரஷ்யா முன்பு கூறியிருந்தது.
இருப்பினும், உக்ரைனியர்கள் ரஷ்யாவின் எச்சரிக்கையை புறக்கணித்து விட்டு, களத்தில் தொடர்ந்து போராடுவதாக உறுதியளித்துள்ளனர்.
இதுகுறிறத்து உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சக் கூறுகையில், ‘தொடர் சண்டையால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆயுதங்களை கீழே போடுவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இதுகுறித்து ஏற்கனவே, நாங்கள் ரஷ்யாவுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்’ என கூறினார்.
உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அதிகமாக ரஷ்யன் மொழி பேசுபவர்களை கொண்ட மேரியோபோல் நகரை கைப்பற்றுவதில் ரஷ்யா ஆர்வம் காட்டுகிறது. இந்த நகரை கைப்பற்றினால் ஏற்கனவே கைப்பற்றி தங்களுடன் இணைத்துள்ள க்ரைமியாவிற்கு ரஷ்யா படைகள் சென்று வர முக்கிய வழித்தடமாக மாறிவிடும். மேரியோபோல் நகரில் 4 இலட்சம் மக்கள் போதுமான குடிநீர், உணவு இல்லலாமல் தவித்து வருவமதக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.