ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நேட்டோ உறுப்பினரான போலந்தின், எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனில் தாக்குதல் இடம்பெற்றுவருவது அந்நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உக்ரைனில் இருந்து வரும் அகதிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போலாந்து பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது.
இந்தநிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலாந்து நாட்டிற்கு செல்லவுள்ளார்.
இந்த பயணத்தின் போது போலாந்து ஜனாதிபதி ஆண்ட்ரிச் டூடாவை ஜோ பைடன் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் மற்றும் போலாந்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற விவகாரங்களுக்கு மத்தியில் போலாந்திற்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
நேட்டோ நாடு தலைவர்கள், ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்திப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அடுத்த வாரம் பெல்ஜியம் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.