தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ள நிலையில், வரவு செலவு திட்டம் மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது.
தமிழக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பொது வரவு செலவு திட்டத்தை கடந்த 18 ஆம் திகதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜா தாக்கல் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து 19 ஆம் திகதி வேளாண் வரவு செலவு திட்டத்தை உழவர் நலத்துறை அமைச்சர் எம்,ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வரவு செலவு திட்டங்கள் மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
குறித்த வரவு செலவு திட்டங்களில் ஏற்கனவே இருந்த அறிவிப்புகளில் சில மாற்றங்கள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய அறிவிப்புகள் இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், வரவுசெலவு திட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.