ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியாது என்பதனால் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளபோதும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து கலந்துரையாட தொடர்ந்தும் தயக்கம் காட்டுவதாக குறிப்பிட்டார்.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறி உறவுகளின் வேதனையுடன் அரசாங்கம் விளையாடியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தினை திருத்துவதாக கூறினாலும், நீண்டகாலத்திற்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது தடுத்து வைக்கும் முறையினை கைவிடும் எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மீது அனைத்து மக்களும் வெறுப்பினை வெளிப்படுத்திவரும் சூழலில் மாநாட்டில் பங்கேற்பதானது வீழ்ச்சி கண்டிருக்கும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு மீண்டும் புத்திதுயர் அளிப்பதாக மாறிவிடும் என கூறினார்.
ஆகவே, இவ்விதமான பினனணிகளைக் கொண்டவர்கள் கூட்டும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில் தமிழ் மக்களுக்கு எவ்வதமான நன்மைகளும் கிடைக்கப்போதில்லை என கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.