போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒன்று அரை லீட்டர் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 120 ரூபாயாகவும் 5 லீட்டர் தண்ணீர் போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் வெற்று போத்தல்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.