கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நிமல் லன்சா இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா தொடர்பான கடிதத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர் கையளித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்மீது குற்றம் சாட்டி வருவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் சில விடயங்களை சுட்டிக்காட்டிஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
நாடு மிகவும் பாரதூரமான விடயங்களை எதிர்நோக்கி வருவதனால் தான் தனது அமைச்சில் உள்ள பிரச்சினைகள் குறித்து மௌனம் காத்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மைத் தாக்கத் தொடங்கினர் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.