ஈரான் சிறையில் இருந்து தன்னை விடுவிக்க அரசாங்கம் இவ்வளவு காலம் எடுத்திருக்கக் கூடாது என்று நசானின் ஸாகரி ராட்க்ளிஃப் கூறியுள்ளார்.
வெஸ்ட்மின்ஸ்டரில் ஊடகங்களிடம் பேசிய அவர், தனது கணவர் மற்றும் மகளுடன் மீண்டும் இணைந்தது குறித்து தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார். மேலும், மீண்டும் இணைவது விலைமதிப்பற்றது என்று விபரித்தார்.
மேலும், தன்னை விடுவிக்க உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், மிகவும் பொறுமையாக இருந்ததற்காகவும் தனது மகளுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆனால் அவர் தனது கணவர் வெளிவிவகாரச் செயலர் லிஸ் ட்ரஸ்ஸை விடுவிப்பதற்காக வழங்கிய கடன் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். இது சரியாக ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்திருக்க வேண்டும் என கூறினார்.
கடந்த வாரம் பிரித்தானியாவுக்கு வியத்தகு முறையில் திரும்பிய பிறகு, பிரிட்டிஷ்- ஈரானியர் முதல் முறையாக பொதுவெளியில் பேசியது இதுவே முதல்முறையாகும்.
நசானின் ஸாகரி ராட்க்ளிஃப், கடந்த 20116ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தனது இரண்டு வயது மகள் கேப்ரியெல்லாவுடன் ஈரானில் உள்ள தனது பெற்றோரைச் சந்திக்கச் சென்றபோது உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
தொம்சன் ரொய்ட்டர்ஸ் அறக்கட்டளையின் திட்ட மேலாளரான ஸாகரி ராட்க்ளிஃப், கடந்த 2016ஆம் ஆண்டு ஈரானிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டபோது அவர் சிறைபிடிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில், அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும், ஓராண்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ஆறு ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, 1970ஆம் ஆண்டின் ஈரானுக்கான பிரித்தானிய அரசாங்கத்தின், கிட்டத்தட்ட 400 மில்லியன் பவுண்டுகள் வரலாற்றுக் கடனைத் தீர்த்த பிறகு அவரின் விடுதலை உறுதிசெய்யப்பட்டு, கடந்தவாரம் அவர் பிரித்தானியா திரும்பினார்.
43 வயதான ஸாகரி ராட்க்ளிஃப்புடன், 67 வயதான ஓய்வுபெற்ற சிவில் இன்ஜினியர் அஷூரி என்பவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 2017ஆம் ஆண்டு உளவு பார்த்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.