இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு இன்று வரவுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
அத்துடன் 23 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சில் நடைபெறும் இலங்கை – அமெரிக்க பங்காளித்துவ உரையாடலின் 4வது அமர்வுக்கு அமைச்சர் பீரிஸ் மற்றும் நுலாண்ட் ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.
இதேவேளை துணைச் செயலாளர் நூலன்ட் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்து வர்த்தக மற்றும் சிவில் சமூகத்தினரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் டொனால்ட் லூ மற்றும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான கொள்கை துணைப் பாதுகாப்புச் செயலாளர் அமண்டா டோரி ஆகியோரும் நுலாண்டுடன் வருகை தரவுள்ளனர்.