மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து நட்ட ஈட்டை பெற்றுத்தருமாறு கோரி மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
நாட்டின் சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் தொடர்பாக தீவிரவாத கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டார்.
சுமார் எட்டு மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.