பாகிஸ்தானின் இராணுவ கூட்டு, தென்கிழக்கு ஆசிய நாட்டில் தீவிரமான பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இராணுவ சதிக்கு காரணமாக மாறிவருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மியான்மார் இராணுவம் பாகிஸ்தானிடம் இருந்து 60 மற்றும் 81 மிமீ மோட்டார்கள், எம்-79 கையெறி குண்டுகள் மற்றும் கனரக இயந்திர துப்பாக்கிகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு அண்டை நாடுடாக உள்ள மியன்மார் பாகிஸ்தானிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க விரும்புகிறது.
2018ஆம் ஆண்டில், மியான்மரின் ஆயுதப்படைகள் 16 ஜே.எப்-17 தண்டர் மல்டி-ரோல் விமானங்களை பாகிஸ்தானிடம் இருந்து 560 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியது.
இந்த விமானத்தை பாகிஸ்தான் ஏரோநாட்டிகல் கம்ப்ளக்ஸ் மற்றும் சீன செங்டு ஏரோஸ்பேஸ் கோர்ப்பரேஷன் இணைந்து உருவாக்கியுள்ளன.
சீனாவின் தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் உட்பட இராணுவத்துடன் வலுவான உறவுகளைக் கொண்ட சர்வதேச கேட்வேஸ் குழும நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய ஆயுத விநியோகஸ்தரான டொக்டர் நயிங் ஹட்டுட் ஆங் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரிகேடியர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு மியான்மர் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து மேம்படுத்தப்பட்ட ஜே.எப்-17 விமானங்கள் மற்றும் ஏர்டுசர்ஃபேஸ் ஏவுகணைகளை விற்பனை செய்வது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
மேம்பட்ட கட்டளை தொழில்நுட்பம், விமானம் பழுதுபார்ப்பு மற்றும் கடற்படை வெடிமருந்துகள் குறித்தும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்-சீனா கூட்டணியின் பின்னணியில், சீனாவின் பூர்வீக உபகரணங்களைப் பராமரிப்பதற்கும், விற்பனைக்கு வழிவகை செய்வதற்கு சீனா பாகிஸ்தானைப் பயன்படுத்துகிறது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.
ஸ்டாக்ஹோம் இன்டர்நஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் தகவல்களின் படி, 2019-2020 ஆம் ஆண்டில் சீன ஆயுத ஏற்றுமதியின் மொத்த பங்கு 5.5 முதல் 5.2 சதவீதமாக குறைந்துள்ளது.
இருப்பினும், சீன ஏற்றுமதிகள் குறைத்து மதிப்பிடப்படுகின்றன என்ற வலுவான கருத்து உள்ளது.
2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்குச் செல்லும் சீனக் கப்பலான ஒட்டோகிளேவ், இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பத்தை, எடுத்துச் சென்றதறமைக்காக இந்திய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டது.
அதேநேரம், பீஜிங், மியான்மர் ஆட்சிக்குழுவுடன் தீவிரமான உரையாடலை நடத்தி வருவதோடு, கடந்த 21இல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பினை பயன்படுத்தி அதன் சர்வதேசப் பிம்பத்தை வலுப்படுத்துவதற்கு ஈடுபடவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
தொற்றுநோய்க்குப் பிந்தைய சூழ்நிலையில் சீனாவுக்கு எதிரான உணர்வுகளின் எழுச்சியைக் குறைத்து, நேரடியாகத் தன்னைத் தொடர்பு கொள்ளாமல் ஒரு இடைத்தரகராகச் செயல்பட பாகிஸ்தானைப் பயன்படுத்தினால், சீனா தனது இராணுவ வன்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் தேவையற்ற சந்தைகளுக்கு வழங்குவதற்கும் வழிசமைப்பதாக இருக்கும்.