லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (சனிக்கிழமை ) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதன்படி, அந்நிறுவனம் விற்பனை செய்யும் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு , இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை விலையை உயர்த்தியுள்ளது .
இதற்கிடையில், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மக்கள் வரிசையில் நிற்கும் நிலை தொடர்கின்றது . இதேவேளை ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே விளக்கமளிக்கையில், சிபெட்கோ எரிபொருள் விலைகள் தற்போதைய நிலையில் அதிகரிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார் .