கொரோனா அச்சம் குறித்த நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவிற்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. இது குறித்த புதிய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த பட்டியலின்படி இந்தியாவில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அடுத்து பயண மதிப்பீட்டை 3 ஆவது நிலையில், இருந்து முதல் நிலைக்கு மாற்றி அமெரிக்கா அறிவித்துள்ளது.
அதேநேரம் சாதாரண பயண மதிப்பீட்டில் எச்சரிக்கை மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவை வைத்துள்ள அமெரிக்கா, லடாக் மற்றும் லே பகுதிகளை தவிர்த்து பயங்கரவாதம் காரணமாக ஜம்மு காஷ்மீரின் மற்ற பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.