பேராதனை வைத்தியசாலையில் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் நேற்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து சத்திரசிகிச்சைகளையும் இடைநிறுத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன, வைத்தியசாலையின் அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் சத்திரசிகிச்சையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கையொப்பமிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.