பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா நாடுகளின் மாநாடு கொழும்பில் இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இன்றைய மாநாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார்.
இதேவேளை, இந்த மாநாட்டிற்கு இணையாக BIMSTEC நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த கலந்துரையாடலுக்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தலைமை தாங்கியிருந்தார்.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
மியன்மார் வெளிவிவகார அமைச்சர் மெய்நிகர் வழியாக இதில் பங்கேற்றிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.